Home /News /tamil-nadu /

அரசு வேலை வாங்கித் தருவதாக நடந்த மோசடி: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்..!

அரசு வேலை வாங்கித் தருவதாக நடந்த மோசடி: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்..!

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

ரூ.2 கோடியே 80 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு.

  • News18
  • Last Updated :
    போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, இரண்டு கோடியே 80 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில், திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

    இதுதொடர்பாக செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அவரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Chennai, DMK, Senthil Balaji

    அடுத்த செய்தி