டிராபிக் போலீஸாரை மிரட்டிய வழக்கறிஞர் - முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

வழக்கறிஞர்

தாய் தனுஜா,மகள் ப்ரீத்தி இருவரும் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

  • Share this:
காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமின் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் அவரது மகளுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை சேத்துபட்டு சிக்னலில் காவலர்களுடன், வழக்கறிஞர் தனுஜா ராஜன் மற்றும் அவரது மகளும் சட்டக்கல்லூரி மாணவியுமான ப்ரீத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.இதனையடுத்து தலைமை காவலர் ரஜித் குமார் அளித்த புகாரில் சேத்துப்பட்டு காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குபதிவு செய்தனர்.

Also Read: 'நான் க்ளோஸ் என்கவுன்ட்டர் கிங் டா..’ எல்லாமே காதுகொடுத்து கேட்க முடியாத வார்த்தைகள் - யார் இந்த மதன் ?

இந்நிலையில், தாய் தனுஜா,மகள் ப்ரீத்தி இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பெண் வழக்கறிஞர் தனுஜாவின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அவரது மகள் ப்ரீத்திக்கு மட்டும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Also Read: மாணவிகளை கட்டிப்பிடித்தது ஏன்? - போலீசில் சிவசங்கர் பாபா அளித்த வாக்குமூலம்

இது போன்று தவறு செய்யும் வழக்கறிஞர் மீது புகார் இல்லாமலேயே பார்கவுன்சில் தாமாக முன் வந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விதிகளை கொண்டு வர வேண்டும் என்றும் பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக வாட்ஸ் அப்பில் அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கறிஞர் ஆர் கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள நீதிபதி இது குறித்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: