Home /News /tamil-nadu /

மு.க.ஸ்டாலினுக்கு எதிரான மனு தள்ளுபடி - மனுதாரருக்கு 5 ஆண்டுகள் தடை விதித்த நீதிமன்றம்

மு.க.ஸ்டாலினுக்கு எதிரான மனு தள்ளுபடி - மனுதாரருக்கு 5 ஆண்டுகள் தடை விதித்த நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாத்திகர் என்பதால், இந்து சமய அறநிலையத் துறையின் ஆலோசனைக் கூட்டங்களுக்கு தலைமை வகிக்க தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல்.

    இந்து சமய அறநிலைய துறையின் ஆலோசனை கூட்டங்களுக்கு தலைமை தாங்க கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிபதியின் முன் அனுமதி பெறாமல் பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய மனுதாரருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்தும் உத்தரவிட்டது.

    சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு நாத்திகர் என்பதால், இந்து சமய அறநிலையத் துறையின் ஆலோசனைக் கூட்டங்களுக்கு தலைமை வகிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

    இந்து மதத்தை பின்பற்றுவதாக, இந்து கடவுள் முன் உறுதிமொழி எடுத்த பிறகே இக்கூட்டங்களுக்கு தலைமை வகிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, இந்தியா மதச்சார்பற்ற நாடு எனவும் இந்திய அரசியல் சட்டம், குடிமக்களுக்கு கருத்து சுதந்திரத்தை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டது.

    முக்கிய பதவிகளை வகிப்பவர்கள், பதவியேற்கும் போது, கடவுள் பெயரிலோ, அரசியல் சட்டத்தின் பெயரிலோ பதவியேற்க அரசியல் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டனர்.

    Must Read : வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் தமிழக நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்

    எந்த மதமும் குறுகிய மனப்பான்மையை போதிக்கவில்லை எனவும், பிற மதத்தினரை புண்படுத்த கூறவில்லை எனவும் கூறிய நீதிபதிகள், மனுதாரரின் மத உணர்வு ஏற்கத்தத்தல்ல எனவும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும், சம்பந்தப்பட்ட நீதிபதியின் முன் அனுமதி பெறாமல் பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய மனுதாரருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai High court, MK Stalin

    அடுத்த செய்தி