குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி அவரது மனைவி கிருத்திகா தாக்கல் செய்த மனுவை விசாரித்த
சென்னை உயர் நீதிமன்றம் மதனின் பேச்சுகள் நச்சுத்தன்மை உடையதாக உள்ளது. அவரை ஏன் வெளியில் விட வேண்டும் என்று கேள்வி எழுப்பியதோடு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூடியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக கைதான மதன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் மதனுக்கு சிறப்பு வசதிகள் செய்துகொடுப்பது தொடர்பாக அவரது மனைவி கிருத்திகா மற்றும் உதவி ஜெயிலர் செல்வம் பேசிய ஆடியோ பேசிய வீடியோ அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மதன் ஏழு மாதத்திற்கு மேல் சிறையில் இருப்பதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி கிருத்திகா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துகொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: இனி ரேஷனில் இது கட்டாயம்... குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தமிழக அரசின் குட் நியூஸ்
எனினும், மதனின் உடல் நிலை நல்ல நிலையில் உள்ளதாகவும் அவருக்கு ஃபிசியோதரப்பி மட்டுமே தேவைப்படுகிறது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, மதனின் பேச்சுகள் நச்சுத்தன்மை உடையதாக உள்ளது. அவரை ஏன் வெளியில் விட வேண்டும். பிப்ரவரி 22ம் தேதிதான் விசாரணைக்கு வருகிறது என்று தெரிவித்த நீதிபதிகள் கிருத்திகாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.