Home /News /tamil-nadu /

TM Krishna : புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்த வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

TM Krishna : புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்த வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பாடகர் டி.எம்.கிருஷ்ணா

பாடகர் டி.எம்.கிருஷ்ணா

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்து வந்தநிலையில், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக "தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021"-ஐ கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வந்தது.

இதற்கு சமூக ஊடகங்கள் இணங்கி நடக்க ஒப்புதல் அளிக்க மே 25ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. இதற்கு கூகுள், பேஸ்புக், வாட்ஸ்அப் சமூக வலைத்தளங்கள் சம்மதம் தெரிவித்து, தங்கள் சேவையைத் தொடர்கின்றன. ஆனால் டிவிட்டர் நிறுவனம் சில ஆட்சேபங்களை தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தில், அனைத்து குடிமக்களுக்கும் தனியுரிமையை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளதாகவும், அதேநேரத்தில் சட்ட ஒழுங்கையும், தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்யும் பொறுப்பும் தங்களுக்கு இருப்பதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த விதிகளை எதிர்த்து, பிரபல கர்நாடக இசை பாடகரான டி.எம்.கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் அளித்த மனுவில், ஒரு இசைக் கலைஞர், கலாச்சார மற்றும் அரசியல் விமர்சகர் என்ற அடிப்படையில் அரசியலமைப்பு வழங்கியுள்ள சுதந்திரமான கருத்துரிமை, தனியுரிமை ஆகியவற்றை மதிப்பதாகவும், தனியுரிமை என்பது இசையைப் போல ஒரு அனுபவம் என குறிப்பிட்டுள்ளார்.

தனியுரிமை என்பது வாழ்க்கை, புதிய கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு, மகிழ்ச்சி, உருவாக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்றும், அவை சுதந்திரமாகவும், கண்ணியத்துடனும், தன் விருப்பப்படும்படி கிடைக்கும்போது தான், தன்னை போன்றோர் ஒரு கலைஞனாக மட்டுமல்ல மனிதனாகவும் உணரமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.

நமது அரசியலமைப்பில் வழங்கப்பட்ட கற்பனை சுதந்திரத்தை, மத்திய அரசின் புதிய விதிகள் தணிக்கை செய்ய காரணமாக அமைந்துள்ளது என குற்றம்சாட்டியுள்ளார். புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் ஒரு கலைஞன் மற்றும் கலாச்சார வர்ணனையாளரான தனது உரிமையை பறிக்கும் வகையில் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளதுடன், சமூக ஊடக சேவைகளின் பயனாளராகவும், ஆன்லைன் உள்ளடக்கத்தை உருவாக்கியவர் என்ற முறையிலும் தனது உரிமைகளை பறிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Must Read : கொரோனாவால் உயிரிழந்த வாலிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.42,000 சுருட்டிய நர்ஸ்!

மத்திய அரசின் புதிய விதிகளை ரத்து செய்யக் கோரிய டி.எம்.கிருஷ்ணாவின் மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 3 வாரங்களில் இது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.
Published by:Suresh V
First published:

Tags: Central government, Chennai High court, Tm krishna

அடுத்த செய்தி