முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜெ. வேதா நிலையம் வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் பரிந்துரை!

ஜெ. வேதா நிலையம் வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் பரிந்துரை!

போயஸ் கார்டன்

போயஸ் கார்டன்

  • 1-MIN READ
  • Last Updated :

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 'வேதா நிலையம்' இல்லத்தை நினைவிடமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அமர்வு பரிந்துரைத்துள்ளது.

சென்னை போயஸ் தோட்டத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் வீட்டை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கறிஞராக இருந்த போது வழக்கு ஒன்றில் ஜெயலலிதா சார்பாக சுப்பிரமணிய பிரசாத் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்ததால், இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.

First published:

Tags: Chennai High court, Jayalalithaa, Veda nilayam