Home /News /tamil-nadu /

நீங்கள் பேசியது உங்களுக்கே ஞாபகம் இல்லையா? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கரிடம் நீதிபதிகள் சராமாரி கேள்வி

நீங்கள் பேசியது உங்களுக்கே ஞாபகம் இல்லையா? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கரிடம் நீதிபதிகள் சராமாரி கேள்வி

சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர்

அதற்கு பதிலளித்த சவுக்கு சங்கர், பல பேட்டி கொடுப்பதால் தனக்கு ஞாபகம் இல்லை அதனால் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரினார். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது என அவதூறாக பேசிய சவுக்கு சங்கருக்கு எதிராக ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடங்கக்கூடாது என்ற வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை செப்டம்பர் 15 ஆம் தேதி ஒத்திவைத்தது.

சென்னை உயர்திமன்ற நீதிபதி G.R.சுவாமிநாதன் குறித்து,  அவதூறாக சமூகவலைதளத்தில் பதிவு செய்ததாக, யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்றம் மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் அளித்த பேட்டி ஒன்றில், "உயர் நீதித்துறை முழுவதும்  ஊழலில் சிக்கியுள்ளது" என கூறியிருந்தார்.

இந்த நிலையில் நீதிதுறை குறித்து அவதூறாக பேட்டி கொடுத்த உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என சவுக்கு சங்கரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கில் செப்டம்பர் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான சவுக்கு சங்கர், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரினார். இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 8 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மீண்டும் சவுக்கு சங்கர் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. சவுக்கு சங்கர் மீதான குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தேவையான குற்ற சாட்டை நீதிபதிகள் வாசித்து காட்டினர்.

இதையும் வாசிக்க: செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கை விசாரித்தே ஆக வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு!

அதில், ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஒட்டு மொத்த நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது என பேட்டி கொடுத்தீர்கள். மேலும் பல பேட்டி மற்றும் பதிவுகளில், சென்னை உயர் நீதிமன்றம், சில நீதிபதிகளின் பரம்பரை சொத்து என பாவித்து செயல்படுகின்றனர், சில நீதிபதிகளுக்கு ஒன்று கூட தெரியவில்லை, ஒரு வழக்கில், மூத்த வழக்கறிஞர் ஆஜராகிறார், அவரே, தீர்ப்பையும் எழுதுகிறார், என நீதி துறை குறித்தும்,  நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பேசி உள்ளீர்கள் என கூறினர்.

இதற்கு பதிலளித்த சவுக்கு சங்கர் தனக்கு இது குறித்து பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரினார்.

அதற்கு, பேட்டி கொடுத்த உங்களுக்கு தெரியாதா? நீங்களே அறிந்து கொண்டு தான் பேசினீர்களா. மறந்து விட்டீர்களா? என நீதிபதிகள் கேள்வி  எழுப்பினர். அதற்கு பதிலளித்த சவுக்கு சங்கர், பல பேட்டி கொடுப்பதால் தனக்கு ஞாபகம் இல்லை அதனால் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரினார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து, ஊடகங்களில், சமூக ஊடகங்களில் பதிவு செய்ய மாட்டேன் உறுதி கூறுங்கள் என நீதிபதிகள் கேட்டனர். அப்போது, சவுக்கு சங்கர்,  இது குறித்து பேட்டி அளிக்க மாட்டேன் என உறுதி கூற இயலாது என கூறினார். இதை தொடர்ந்து நீதிபதிகள், செப்டம்பர் 15 ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Chennai High court, Cyber crime, Youtube

அடுத்த செய்தி