சென்னையில் கனமழை... மகிழ்ச்சி வெள்ளத்தில் பொதுமக்கள்

கனமழையின் காரணமாக சாலைகளில் நீர் ஆங்காங்கே தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்

சென்னையில் கனமழை... மகிழ்ச்சி வெள்ளத்தில் பொதுமக்கள்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: July 15, 2019, 8:36 PM IST
  • Share this:
சென்னை அருகே மதுரவாயல் , வானகரம், நெற்குன்றத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையைப் பொறுத்தவரை நகரின் சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மதுரவாயல் ,வானகரம்,நெற்குன்றத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.


கனமழையின் காரணமாக சாலைகளில் நீர் ஆங்காங்கே தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மேலும் கனமழை பெய்த பகுதிகளில் மின்வெட்டு செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் லேசான மழை பெய்துள்ளது. பூந்தமல்லி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. மழையின் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு குறைய வாய்ப்புள்ளதாலும், குளிரான சூழல் ஏற்பட்டுள்ளதாலும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Also Watch
First published: July 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading