சென்னை பாடி, அம்பத்தூரில் நள்ளிரவில் பெய்த கனமழை.. சாலையில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி..

சென்னை பாடி, அம்பத்தூரில் நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னை பாடி, அம்பத்தூரில் நள்ளிரவில் பெய்த கனமழை.. சாலையில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி..
மழை
  • Share this:
சென்னையில் நேற்று நள்ளிரவு பலத்த காற்றுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக ஆவடி, பூந்தமல்லி, போரூர், மதுரவாயில், அம்பத்தூர், பாடி தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

அதிலும் குறிப்பாக அண்ணா நகர், பாடி, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக கொரட்டூரை ஒட்டியுள்ள அம்பத்தூர் எம்.டி.எச் சாலை, மண்ணூர்பேட்டையில் சாலை ஓரத்தில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியில் வேலைக்கு செல்வோர் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் படிக்க...பக்ரீத்: மசூதிகளில் தொழுவதற்கு புதுச்சேரி அரசு அனுமதி..இன்று மட்டுமல்ல பல ஆண்டுகளாக இதே பிரச்சினை நீடிப்பதாகவும் அருகில் இருக்கக்கூடிய கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டி இருப்பதாலும் மழைநீர் செல்வதற்கான போதிய வடிகால் வசதிகள் இல்லை. இது தொடர்ச்சியாக இந்த பகுதியில் இருந்து வரும் பிரச்சனை என்று அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
First published: August 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading