Home /News /tamil-nadu /

ஹெச்.டி.எஃப்.சி. வங்கியில், 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்கில் தவறுதலாக ரூ.13 கோடி வரை வரவு?

ஹெச்.டி.எஃப்.சி. வங்கியில், 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்கில் தவறுதலாக ரூ.13 கோடி வரை வரவு?

hdfc

hdfc

வங்கியில் உள்ள வாடிக்கையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரின் கணக்கில், எதிர்பாராதவிதமாக  மொத்தம் 13 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

    ஹெச்.டி.எஃப்.சி.வங்கியில், 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்கில் ரூ.13 கோடி வரை வரவு வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் ஹெச்டிஎப்சி வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் உள்ள வாடிக்கையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரின் கணக்கில், எதிர்பாராதவிதமாக  மொத்தம் 13 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

    இதனால், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

    இது குறித்து, ஹெச்.டி.எஃப்.சி வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ஞாயிறு காலை புதிய சாப்ட்வேரை அப்டேட் செய்யும் போது சிறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக 5 ஆயிரம், 10 ஆயிரம் என வாடிக்கையாளர்கள் சிலரது வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி மட்டும் அவர்களுக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வாடிக்கையாளர்கள் கடைசியாக செலவு செய்த பரிவர்த்தனை பக்கத்தில் சில தகவல்களை பதிவேற்றம் செய்யும்போது, தவறுதலாக வரவு பக்கத்தில் பதிவேற்றம் செய்ததே இந்த குழப்பத்திற்கு காரணம் எனவும் விளக்கம் அளித்துள்ளது. 

    இருப்பினும், வாடிக்கையாளருக்கு குறுஞ்செய்தி மட்டும் பரவியதாகவும், பணம் ஏதும் அவர்களது வங்கிக் கணக்கிற்கு செல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai, HDFC

    அடுத்த செய்தி