சிலைக்கடத்தல் தொடர்ந்தால் சிபிஐ விசாரணை - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

news18
Updated: July 11, 2018, 1:56 PM IST
சிலைக்கடத்தல் தொடர்ந்தால் சிபிஐ விசாரணை - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
சென்னை உயர்நீதிமன்றம்
news18
Updated: July 11, 2018, 1:56 PM IST
சைவமும், வைணவமும் தழைத்தோங்கும் தமிழகத்தில் சிலைக்கடத்தல் என்பது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடத்தப்பட்ட சிலைகள் மீடகப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில், மேலும் பல சிலைகள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. இது தமிழக அரசு நிர்வாகத்தின் மோசமான நிலையை எடுத்துக் காட்டுகிறது என நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் சிலை கடத்தல் வழக்கை நீதிமன்றம் விசாரித்து கொண்டிருக்கும்போதே அண்ணாமலையார் கோயிலின் பஞ்சலோக சிலை மாயமானதாகவும், ஸ்ரீரங்கம் கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாகவும், அதன் மரவேலைப்பாடுகள் அழிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

அதனால் இதுதொடர்பாக அறநிலையத்துறை சிறப்பு வழக்கறிஞர் மகாராஜனிடம் உயர் நீதிமன்ற நீதிபதி பலவிதமான கேள்விகளை எழுப்பினார். மேலும் இதே நிலை தொடர்ந்தால், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிலைகளை பாதுகாக்க களம் அமைக்க வேண்டும். அதற்கான உத்தரவை அமல்படுத்தும் வகையில் அட்டவணையை இன்று தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அரசின் கூடுதல் தலைமை நீதிபதியும்  சிலை கடத்தல் சிறப்புப் பிரிவு ஐஜி- யும் விசாரணைக்கு வராததால் இந்த வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...