தரமற்ற சாலைகள் போடும் நிறுவனங்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? நீதிபதிகள் கேள்வி

சென்னையில் சாலைகள் அமைக்க எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? அதில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது? யாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது? என பலவிதமான கேள்விகளை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.

Web Desk | news18
Updated: July 2, 2019, 8:42 AM IST
தரமற்ற சாலைகள் போடும் நிறுவனங்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? நீதிபதிகள் கேள்வி
சென்னை உயர்நீதிமன்றம்
Web Desk | news18
Updated: July 2, 2019, 8:42 AM IST
ஒப்பந்த விதிகளை மீறி தரமற்ற சாலைகளை அமைத்த ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக விதிகளின்படி, சாலைகள் அமைக்கும் முன் ஏற்கனவே உள்ள சாலையில் இரண்டு அங்குலம் தோண்டி எடுத்த பிறகே புதிய சாலை அமைக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி பெருங்களத்தூரை சேர்ந்த முரளி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சென்னையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சாலைகள் புதிதாக போடப்படுவதாகவும், தண்ணீர் லாரிகள் செல்வதால் சாலைகள் சேதமடையும் போது மட்டும் அவை சரி செய்யப்படுவதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சாலைகள் தரமாக அமைக்கப்பட வில்லை என்றால், ஒரே நிறுவனத்துக்கு ஏன் மீண்டும் மீண்டும் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது எனவும், தரமற்ற சாலையை அமைத்த ஒப்பந்த நிறுவனத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்திற்கு உதவ சிறப்பு வழக்கறிஞரை நியமித்து ஆய்வு செய்ய உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

மேலும், சென்னையில் சாலைகள் அமைக்க எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? அதில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது? யாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது? எத்தனை சாலை பணிகள் இதுவரை முடிந்துள்ளது? நிலுவையில் உள்ள பணிகள் எவ்வளவு என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் படிக்க... 40 ஆண்டுகளுக்கு பின் கோலாகலமாகத் தொடங்கிய அத்தி வரதர் திருவிழா

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...