மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களை ஏப்ரல் 25-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வருமானவரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் ஹைத்ராபாத்தில் திராட்சை தோட்டம், வீடு, சென்னை போயஸ் கார்டன் வீடு மற்றும் கோடநாடு எஸ்டேட் என சுமார் ரூ.913 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன.
இந்தச் சொத்துக்களை யாருக்கும் ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைக்காத நிலையில், இந்தச் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கவேண்டும் என சென்னையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நீதிபதி சரவணன் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதாவின் சகோதரர் மகனான தீபக், தன்னை நிர்வாகியாக நியமிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை, இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என அவர் தரப்பில் கோரப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தீபக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும், இந்த வழக்குடன் விசாரிக்க ஒப்புதல் தெரிவித்தனர்.
மேலும், ஜெயலலிதாவின் சொத்துக்கள் மற்றும் கடன் விவரங்களை குறித்த அறிக்கையை தாக்கல்செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பான நிலைப்பாட்டை ஏப்ரல் 25-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Also Read... தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: தேர்தல் ஆணையர்கள் பங்கேற்பு
ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
Also see... நடக்குமா 18 தொகுதி இடைத்தேர்தல்?
Also Read...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
POINTS TABLE:
ORANGE CAP:
PURPLE CAP:
RESULTS TABLE:
ன்ஃப்க்ஹ்ன்hgdfghg
SCHEDULE TIME TABLE:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai High court, Income tax, Jayalalithaa, Property