முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜெயலலிதா சொத்துக்களின் தற்போதைய மதிப்பு என்ன? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

ஜெயலலிதா சொத்துக்களின் தற்போதைய மதிப்பு என்ன? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

தங்களை நிர்வாகிகளாக நியமிக்க தீபா மற்றும் தீபக் உரிமை கோர முடியாது என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களின் தற்போதைய மதிப்பை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வருமானவரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் ₹ 913 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக்கோரி அதிமுகவை சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதைத் தொடர்ந்து தங்களை நிர்வாகிகளாக நியமிக்க கோரியும், வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற ஆட்சேபித்தும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்களை நிர்வாகிகளாக நியமிக்க தீபா மற்றும் தீபக் உரிமை கோர முடியாது என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் சொத்துக்களை மக்களுக்கு அளிப்பது தான் மனுதாரரின் விருப்பமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஜெயலலிதாவின் சொத்துக்கள் எங்கெல்லாம் உள்ளன என்றும் அவற்றின் தற்போதைய மதிப்பு என்ன என்பது குறித்தும் வருமான வரிதுறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணி குறித்தும், தற்போது என்ன நிலையில் உள்ளது என்பது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க ஆணையிட்டு வழக்கை ஆகஸ்ட் 5-ம் தேதி தள்ளி வைத்தனர்.

Also Watch: குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய Good touch, Bad touch...

First published:

Tags: Jayalalithaa, Jayalalithaa Asset