தீ விபத்தில் சிக்கிய கட்டிடத்தை ஏன் இடிக்கவில்லை? நீதிமன்றம் கேள்வி

சென்னை உயர்நீதிமன்றம்.

மாநகராட்சி அதிகாரிகள் மீது ஏன் இத்தனை நாட்களாய் நடவடிக்கை எடுக்கபடவில்லை ? விதிமீறல் கட்டிடத்தை ஏன் இடிக்கவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வடபழனியில் தீ விபத்துக்குள்ளான கட்டிடத்தை ஏன் இடிக்கவில்லை? என்று சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு அருகாமையில் தெற்கு பெருமாள் வீதியில் இருக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

பின்னர் அந்த கட்டிடத்திற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தன. இந்த சம்பவம் தொடர்பாக டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

அதில், வடபழனியில் தீவிபத்துக்குள்ளான கட்டிடம் விதிகளை மீறி அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதால் கட்டிடத்திற்கு அனுமதி அளித்த மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் முன் விசாரனைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.

அதற்கு டிராபிக் ராமசாமி தரப்பில் விபத்து நடந்த கட்டிடத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு மீண்டும் அங்கு சில குடும்பங்களை குடியமர்த்தியுள்ளனர். மேலும், நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள், கட்டிட உரிமையாளருடன் இணக்கமாக இருந்து வருவதாக புகார் தெரிவித்தார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், மாநகராட்சி அதிகாரிகள் மீது ஏன் இத்தனை நாட்களாய் நடவடிக்கை எடுக்கபடவில்லை ? விதிமீறல் கட்டிடத்தை ஏன் இடிக்கவில்லை? என கேள்வி எழுப்பியனர்.

மேலும் இது தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர்.

அதேபோல், விபத்துகுள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடம் விதியை மீறி கட்டபட்டதாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கும் இதே நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கிற்கும் அவருக்கும் நேரடி தொடர்பு இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்தி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published: