• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு தடை கேட்ட அப்போலோ மனு தள்ளுபடி!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு தடை கேட்ட அப்போலோ மனு தள்ளுபடி!

ஜெயலலிதா

ஜெயலலிதா

90 சதவீதம் விசாரணையை ஆறுமுகசாமி  ஆணையம் முடித்துவிட்டதால் அப்போலோவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக தங்கள் மருத்துவர்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த, தடை கோரிய அப்போலோ நிர்வாகத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஆஜராக சம்மன் அனுப்பியது.

ஆனால், ஆணையத்தில் மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராக மாட்டார்கள் என்று அப்போலோ நிர்வாகம் கூறியது.

அதனைத்தொடர்ந்து மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யபட்டது. மேலும் அந்த மனுவில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க, நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 90 சதவீதம் விசாரணையை ஆறுமுகசாமி  ஆணையம் முடித்துவிட்டதால் அப்போலோவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see... அரசுப் பேருந்தில் கேட்பாரின்றி கிடந்த ரூ.3.47 கோடி... வங்கி 


ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:

ன்ஃப்க்ஹ்ன்hgdfghg

SCHEDULE TIME TABLE:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: