முதல்வர் குறித்து கடுமையாக விமர்சிப்பத்தை நிறுத்துங்கள் - மு.க.ஸ்டாலினுக்கு நீதிபதி அறிவுரை

சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து மிக கடுமையாக விமர்சிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 • Share this:
  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முதலமைச்சர் பழனிசாமி குறித்த மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

  லட்சக்கணக்கான தொண்டர்களின் மதிப்பை பெற்றிருக்கும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை கூறுவது கண்டனத்துக்குரியது என்றும், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது பொதுமக்களிடையே தவறான தாக்கத்தை உருவாக்கும் எனவும் கருத்து தெரிவித்தார்.

  ஆரோக்யமான அரசியல் சூழலை உருவாக்கி மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என அரசியல் கட்சித்தலைவர்களுக்கு அறிவுறுத்திய நீதிபதி, மு.க.ஸ்டாலினுக்கு எதிரான மூன்று அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: