ஊரடங்கின்போது கணக்கிடப்பட்ட கரண்ட் பில்லுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

ஊரடங்கின்போது மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஊரடங்கின்போது கணக்கிடப்பட்ட கரண்ட் பில்லுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
  • Share this:
ஊரடங்கு காலத்தில் மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் முந்தைய மாதத்தில் செலுத்தப்பட்ட மின் கட்டண தொகைக்கு பதிலாக அதற்கான யூனிட்டை கழித்துக் கொண்டு எஞ்சிய யூனிட்டுகளுக்கான தொகையை இரு தனித்தனி பில்களாக பிரித்து மின் கட்டணம் வசூலிக்கக் கோரி தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்.எல்.ரவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் புதிதாக மின் கணக்கீடு செய்யும்போது ஏற்கனவே செலுத்திய தொகையை கழித்துக் கொண்டு புதிதாக கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாகவும், இதில் விதி மீறல் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது.


மேலும் படிக்க வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு ரத்து: டிரம்ப் அரசு அறிவிப்பு

இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு ஜூலை 15ஆம் தேதியான இன்று ஒத்துவைக்கப்பட்டது. இந்நிலையில், நீதிபதிகள் சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்க தள்ளுபடி செய்து, அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading