Home /News /tamil-nadu /

மருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு 50% இடஒதுக்கீடு கோரி வழக்கு - உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

மருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு 50% இடஒதுக்கீடு கோரி வழக்கு - உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து, அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    Also see:

    ஏற்கனவே, இதுதொடர்பாக பாமக, மதிமுக, தி.க உள்ளிட்டவை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் ஆஜராகி இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கும்படி முறையிட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நாளை காலை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Chennai High court, OBC Reservation

    அடுத்த செய்தி