முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சுற்றுச்சூழல் விதிமீறல் - தனியார் எண்ணெய் சேமிப்பு நிலையத்தை மூட பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சுற்றுச்சூழல் விதிமீறல் - தனியார் எண்ணெய் சேமிப்பு நிலையத்தை மூட பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

கே.டி.வி தனியார் எண்ணெய் சேமிப்பு நிலையம்.

கே.டி.வி தனியார் எண்ணெய் சேமிப்பு நிலையம்.

சுற்றுச்சூழல் விதிமீறல் வழக்கில் தனியார் எண்ணெய் சேமிப்பு நிலையத்தை மூட பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தண்டையார்பேட்டை மற்றும் திருவொற்றியூரில் கே.டி.வி. எனும் நிறுவனத்தின் எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சேமிப்பு நிலையங்களுக்கு சென்னை துறைமுகத்தில் இருந்து எண்ணெய் கொண்டு வருவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் குழாய்கள் அமைக்கப்பட்டன. இந்தப் பணிகளுக்கு CRZ அனுமதி பெறவில்லை என்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மீனவர் செயற்பாட்டாளர் செல்வராஜ் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, Post Facto Clearance எனும் முறையில் CRZ அனுமதியை இந்த நிறுவனம் பெற்றது.

CRZ விதிகளின்படி துறைமுகம் அல்லது துறைமுகத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே எண்ணெய் சேமிப்பு தொட்டிகளை அமைக்க வேண்டும். இந்த விதிகளுக்கு எதிராக தண்டையார்பேட்டையில் எண்ணெய் தொட்டிகளை அமைத்ததால் அவற்றை அகற்றக்கோரியும் மீனவச் செயற்பாட்டாளர் செல்வராஜ் வழக்கு தொடுத்திருந்தார்.

Also read: அரசு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் ஓ.பி.எஸ் பெயர் இடம்பெறாதது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

இந்த வழக்கு விசாரணையில் கே.டி.வி நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் தாய்பால் தாஸ் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு இன்று இறுதித் தீர்ப்பை வழங்கியது.

அந்தத் தீர்ப்பில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட 18 எண்ணெய் சேமிப்புத் தொட்டிகளையும் மூன்று மாதங்களுக்குள் கே.டி.வி நிறுவனம் அகற்ற வேண்டும். அப்படி அகற்றத் தவறினால் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அவற்றை அகற்ற வேண்டும். இதற்காக ஆகும் செலவை கே.டி.வி நிறுவனத்திடமிருந்து பெற வேண்டும். சட்டவிரோதமாக கட்டடங்களை எழுப்பி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்திய காரணத்திற்காக கே.டி.வி. நிறுவனத்திற்கு 25 லட்சம் அபராதமும் கே டிவி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதிகளை ரத்து செய்வதாகவும் கூறப்பட்டிருந்தது

First published:

Tags: National Green Tribunal