Home /News /tamil-nadu /

ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும் அழகியல் சிகிச்சை இனி இலவசமாக...!

ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும் அழகியல் சிகிச்சை இனி இலவசமாக...!

கோப்புப்படம்

கோப்புப்படம்

சினிமாத்துறையிலும் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களிடையும் புழக்கத்தில் இருக்கும் இந்த ஃபில்லர்கள் 1 எம்.எல் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புடையது.

  • News18
  • Last Updated :
    வயது முதிர்ச்சி காரணமாக முகத்தில் ஏற்படும் சுருக்கம், பதின்ம வயதில் உருவான பருக்கள் ஆகியவற்றை ஊசி மூலம் சரிசெய்யும் சிகிச்சை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இலவசமாக கிடைக்க உள்ளது.

    சுகாதாரத்துறையில் நாட்டிலேயே சிறந்து விளங்கும் தமிழகம் சமீபத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டு சாதனை படைத்தது. விபத்தில் இரண்டு கையையும் இழந்த ஒருவருக்கு தானமாக கிடைத்த கையைப் பொருத்தி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதித்தனர். புதிய கைகளை பெற்றவருக்கு சுகாதாரத்துறையிலேயே பணியும் வழங்கப்பட்டது.



    இந்நிலையில், வயது முதிற்சியின் காரணமாக முகத்தில் ஏற்படும் சுருக்கம், பதின் வயதில் உருவான பருக்கள் மற்றும் விபத்தினால் உருவான சிறிய பள்ளங்கள் ஆகியவற்றை ‘டெர்மல் ஃபில்லர்ஸ்’ (dermal filler)என்ற சிகிச்சையின் மூலம் சரிசெய்ய முடியும்.

    சினிமாத்துறையிலும் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களிடையும் புழக்கத்தில் இருக்கும் இந்த ஃபில்லர்கள் 1 எம்.எல் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புடையது.

    இந்த அழகியல் சிகிச்சை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் முழுவதும் இலவசமாக இன்று முதல் வழங்கப்பட உள்ளது.
    Published by:Sankar
    First published:

    Tags: Govt hospital

    அடுத்த செய்தி