வேளச்சேரியில் அரசுப் பேருந்து ஓட்டிச்சென்ற ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி.. உயிரிழப்பு.. கார் மீது மோதி விபத்து

வேளச்சேரியில் அரசுப் பேருந்து ஓட்டிச்சென்ற ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி.. உயிரிழப்பு.. கார் மீது மோதி விபத்து
  • News18
  • Last Updated: October 5, 2019, 2:28 PM IST
  • Share this:
சென்னை வேளச்சேரியில் அரசுப் பேருந்து ஓட்டுநர் பேருந்தை ஓட்டிக் கொண்டு வந்திருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அடுத்தடுத்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளானது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அரசு பேருந்து ஓட்டுநரை அப்பகுதியில் இருந்த மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் விபத்துக்குள்ளான அரசு பேருந்தில் பயணித்த பயணிகள் பத்திரமாக எந்த ஒரு காயம் இல்லாமல் வேறு பேருந்துக்கு மாற்றி அனுப்பிவிட்டனர்.

இந்த விபத்து காரணமாக வேளச்சேரியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனிடையே, சிகிச்சை பலனின்றி பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.பார்க்க :

காமராஜர் கொலை முயற்சி…!

First published: October 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்