சென்னையில் இருந்து ஊர்களுக்குச் செல்ல அரசுப்பேருந்து முன்பதிவு தொடக்கம்.. சமூக இடைவெளி காக்க அதிகாரிகள் நடவடிக்கை...

சமூக இடைவெளியை பின்பற்றி இவர்களை ஊருக்கு அனுப்பி வைப்பதற்கு  அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து ஊர்களுக்குச் செல்ல அரசுப்பேருந்து முன்பதிவு தொடக்கம்.. சமூக இடைவெளி காக்க அதிகாரிகள் நடவடிக்கை...
கோயம்பேடு
  • Share this:
வெளியூர்களுக்கான பேருந்து போக்குவரத்து தொடங்குவதை ஒட்டி  அரசுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு  செய்ய  ஏராளமான மக்கள் முன்வந்துள்ளனர்.

சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல ஏராளமான பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.வரும் 7ம் தேதி முதல் வெளியூர்களுக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து அரசுப் பேருந்துகளுக்கான  டிக்கெட் முன்பதிவு இன்று முதல் நடைபெறுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரு சில நபர்கள் வந்து டிக்கெட் வாங்கிச் செல்கின்றனர். பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்துள்ளனர்.


குறிப்பாக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் அதிக அளவு டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஐந்து மாதங்களாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சென்னையில் தவித்து வந்த நடுத்தர வர்க்கத்தினர் பலரும் தற்போது போக்குவரத்து தொடங்குவதால் ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.எனவே வரும் 7-ஆம் தேதி முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக இடைவெளியை பின்பற்றி இவர்களை ஊருக்கு அனுப்பி வைப்பதற்கு  அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
First published: September 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading