முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Gold Silver Rate: சற்று குறைந்தது தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

Gold Silver Rate: சற்று குறைந்தது தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை

தங்கம் விலை

Gold Silver Rate: நேற்று ஒரு சவரன் தங்கம் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 56 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று ஒரு ஆபரண தங்கம் (22 காரட்) சவரன் 37 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 056 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு கிராம் தங்கம் 8 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 632 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ALSO READ | சென்னை ஓபன் டென்னிஸ் இறுதி போட்டி : 2 மணிநேரம் நேரில் கண்டுகளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இதேபோன்று ஒரு கிராம் வெள்ளி விலை 62 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 62 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில், தற்போது தங்கம் விலை சரிந்து ஆறு வாரங்களுக்கு முந்தைய விலைக்கு விற்கப்படுவதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துளனர்.

First published:

Tags: Gold Price, Gold rate