ஃபேஸ்புக்கில் பெண்கள் படங்களுடன் ஆபாசப் பதிவு... மர்மநபர் யார்?

சென்னையில், முகநுால் போலி கணக்குகள் மூலம் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக சித்திரித்து பதிவிட்டுள்ள நபரை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையிடம் புகாரளித்துள்ளனர்.

ஃபேஸ்புக்கில் பெண்கள் படங்களுடன் ஆபாசப் பதிவு... மர்மநபர் யார்?
  • Share this:
சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவியின் பெயரில் முகநூலில் போலிக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில் தன்னை பாலியல் தொழில் செய்யும் பெண் எனவும் தன்னை தொடர்புகொள்ளுமாறும் குறிப்பிட்டு அலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த மாணவியின் அலைபேசிக்கு தினசரி நுாற்றுக்கணக்கான அழைப்புகள் வரத் தொடங்கின. கடும் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி யாரிடம் இந்தப் பிரச்னையை சொல்வது எனத் தெரியாமல் தவித்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பல பெண்களின் படங்கள் மற்றும் அலைபேசி எண்களுடன் போலி முகநுால் கணக்குகள் தொடங்கப்பட்டு அதேபோல், பாலியல் தொழில் செய்பவர் என்ற அடையாளத்துடன் பதிவுகள் இடப்பட்டுள்ளன.

பெற்றோர், கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் இந்தப் பிரச்னை குறித்துப் பேச முடியாமல் பெண்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் வழக்கம் போல கொரோனா பணிகளைக் காரணம் காட்டி புகாரை காவல்துறையினர் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.


Also Read : சசிகலா தலைமையில் டிடிவி தினகரன் மகளுக்கு விரைவில் திருமணம்

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் தன் அக்கம்பக்கத்து தோழிகளிடம் இதுபற்றிக் கூறும் போது அவர்களும் இதேபோல் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. போனில் அழைப்பது மட்டுமின்றி முகநுால் கணக்கிலும், வாட்ஸ் ஆப் கணக்கிலும் வந்து பலர் தொந்தரவு செய்வதாக பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதோடு மட்டுமின்றி, சிலர் தங்கள் படங்களை அனுப்பி நான் ஓகேவா என்று கேட்கின்றனர் என்றும் சிலர் வீட்டு முகவரி தெரிந்து அங்கேயே வந்துவிடுகின்றனர் என்றும் பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆன்ட்ராய்டு செல்போன் வைத்துள்ள பெண்கள் மட்டுமின்றி, சாதாரண செல்போன்கள் வைத்துள்ள பெண்களும், முகநுாலில் கணக்கே இல்லாத பெண்களும் கூட இந்த மர்ம நபர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஊரடங்கு தளர்வு அமலில் உள்ள நிலையில் 2 குழந்தைகளை வைத்துக் கொண்டு வேலைக்குக் கூட செல்ல முடியாமல் இந்த பிரச்னையால் தவிப்பதாகவும் கதறுகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் ஆன்லைன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளித்துள்ளனர்.இதையடுத்து அம்பத்தூர் மகளிர் காவல்நிலைய போலீசார் இந்த வழக்கை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் 75300 01100 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் புகாரளிக்கலாம் எனவும் புகார்அளிப்போரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் போலீசார் அறிவித்துள்ளனர்

துணை ஆணையாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு, சென்னை பெருநகர காவல்துறை, கிரீம்ஸ் ரோடு (ஆயிரம் விளக்கு காவல் நிலையம் வளாகம்) ஆயிரம் விளக்கு, சென்னை-600 006 என்ற முகவரிக்கு தபாலிலும் புகாரை அனுப்பலாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். முகநுாலில் சென்னை டாட் போலீஸ் என்ற முகவரியில் இயங்கும் சென்னை மாநகர காவல்துறை பக்கத்திலும் புகார் அளிக்கலாம்.

கொரோனா காலகட்டத்தில் இணையத் தொடர்பும் அலைபேசியும் தவிர்க்க முடியாத சாதனங்களாகி விட்டன. பல பள்ளிகளி்ல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி விட்ட நிலையிலும், பல பெண்கள் வீட்டில் இருந்து கணினி மற்றும் அலைபேசி மூலம் அலுவலக வேலை செய்ய வேண்டிய நிலையிலும் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் கடும் மனஉளைச்சலையும் வேதனையையும் தான் தரும்.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading