தற்கொலைக்கு வற்புறுத்திய காதலி... சயனைடு கொடுத்து கொன்ற காதலன்...

காஜல் உயிர் பிழைத்தால் தம்மை மீண்டும் தற்கொலைக்கு வற்புறுத்துவார் என பயந்த சுமேர், துப்பட்டாவால் அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் சயனைடு கலந்த குளிர்பானத்தை சிறிதளவு குடித்துவிட்டு மயங்கியுள்ளார்.

தற்கொலைக்கு வற்புறுத்திய காதலி... சயனைடு கொடுத்து கொன்ற காதலன்...
.
  • News18
  • Last Updated: July 11, 2019, 10:08 PM IST
  • Share this:
புன்னகை மன்னன் திரைப்படத்தில், தற்கொலைக்கு முயன்ற காதலன் உயிர்தப்பி, காதலி உயிரிழந்து விடுவார். இதேபோல் ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த காதலர்களான சுமேர்சிங், காஜல் இருவரும் ஜுன் 10-ம் தேதி பிற்பகலில் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

அடுத்த நாள் காலை வெகு நேரமாகியும் அறை திறக்கப்படாததால், விடுதி மேலாளர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.


இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் முன்னிலையில் அறை திறக்கப்பட்டது. அப்போது சுமேர்சிங்-காஜல் இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

அருகில் சென்று பார்த்த போது காஜல் ஏற்கனவே உயிரிழந்ததும், சுமேர்சிங் உயிருக்குப் போராடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சுமேர்சிங்கை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்த போலீசார், காஜலின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.உடல்நலம் தேறி வரும் காதலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்துள்ளார்.

இந்நிலையில் இறந்துபோன காஜலின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெறிக்கப்பட்டும் விஷம் அருந்தியும் இறந்து போனது தெரியவந்தது.

இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் காதலன் சுமேர் சிங்கிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

சுமேர் சிங்கும், காஜலும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்தனர். அவர்களது காதலை ஏற்க மறுத்த காஜல் வீட்டார், அவருக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்தனர்.

இதனை பிடிக்காத காஜல் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என பலமுறை காதலன் சுமேர் சிங்கிடம் வலியுறுத்தி வந்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதில் சுமேர் சிங்குக்கு விருப்பமில்லை எனக் கூறியுள்ளார். ஆனாலும் விடாமல் காதலி காஜல் வற்புறுத்தியுள்ளார்.

ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல், ஆன்லைன் மூலம் சயனைடு வாங்க முடிவு செய்துள்ளார் சுமேர் சிங்

தங்கநகை வியாபாரம் செய்து வருவதாகவும், தங்கத்தை கரைப்பதற்காக சயனைட் தேவைப்படுவதாகவும் கூறி மருந்து கம்பெனியை நம்ப வைத்து சயனைடு பெற்றுள்ளார்.

கடந்த மாதம் 10-ம் தேதி இருவரும் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இருவரும் குளிர்பானத்தில் சயனைடை கலந்து குடிக்க முடிவு செய்தனர். குளிர்பானத்தில் கலந்த சயனைடை காதலி காஜல் முழுவதுமாக குடித்தார்.

தற்கொலை செய்வதில் விருப்பம் இல்லாத சுமேர் சயனைடு கலந்த குளிர்பானத்தை குடிப்பது போல நடித்துள்ளார். இதனை கவனித்த காஜல் அது பற்றி கேட்டு சுமேரை தாக்கியுள்ளார். சயனைடை குடித்ததால் காஜலுக்கு உடல் விட்டு விட்டு இழுத்துள்ளது.

காஜல் உயிர் பிழைத்தால் தம்மை மீண்டும் தற்கொலைக்கு வற்புறுத்துவார் என பயந்த சுமேர், துப்பட்டாவால் அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் சயனைடு கலந்த குளிர்பானத்தை சிறிதளவு குடித்துவிட்டு மயங்கியுள்ளார்.

சுமரின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், காதலியை கொலை செய்த குற்றத்திற்காக அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Also watch: ரத்தத்துக்கு ரத்தம்... பழிக்குப் பழி... என மதுரையில் ஒரு கொடூரக் கொலை...!

First published: July 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading