சென்னை ஐஐடி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை...!

சென்னை ஐஐடி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை...!
ஐஐடி சென்னை
  • Share this:
சென்னை ஐஐடியில் தங்கிப்படிக்கும் கேரளாவைச் சேர்ந்த 18 வயது மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை அடுத்துள்ள கிளி கொல்லூர் ஊரைச் சேர்ந்தவர் பாத்திமா லதீப் (18). இவர் சென்னை ஐ.ஐ.டியில் முதலாமாண்டு MA humanities என்ற பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். மேலும் இவர் ஐ.ஐ.டி வளாக சரவியூ விடுதியில் அறை எண் 349 ல் தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில், பாத்திமா லதீபின் தாயான சஜிதா லதீப் நேற்று இரவு முதலே தனது மகளுக்கு கால் செய்துள்ளார். ஆனால் பாத்திமா லதீப் போனை எடுக்கவில்லை. இன்று காலையும் சஜிதா லதீப் போன் செய்ய கால் எடுக்க வில்லை. இதனால் சந்தேகமடைந்த சஜிதா லதீப் தனது மகளின் தோழிகளுக்கு கால் செய்து போன் எடுக்காத விவரத்தை கூறியுள்ளார்.


இன்று காலை 10 மணி அளவில் பாத்திமா லதீபின் தோழிகள் அவரது அறையை தட்டியுள்ளனர். நெடுநேரமாகியும் திறக்காததால் விடுதி ஊழியர்களிடம் சொல்ல அவர்கள் வந்து அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாத்திமா லதீப் பேனில் நைலான் கயிறு கொண்டு தூக்கு மாட்டி இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்த கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடற்கூறு ஆய்வுக்காக பெண்ணின் உடலை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலீசார் முதற்கட்ட விசாரணையில் பாத்திமா லதீப் முதன்முறையாக குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வாடி வந்துள்ளார் என்பதும் இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த இன்டர்னல் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. அவரது தற்கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்