ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் மீண்டும் ஏ.சி பேருந்துகள்...! கட்டணம், வழித்தடம் உள்ளிட்ட விபரங்கள்

சென்னையில் மீண்டும் ஏ.சி பேருந்துகள்...! கட்டணம், வழித்தடம் உள்ளிட்ட விபரங்கள்

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது.

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது.

Chennai AC Bus Fare Details |

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சென்னையில் ஒன்னரை ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஏ.சி பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கியுள்ளது.

  சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏ.சி வசதி கொண்ட பேருந்துகள் பல வழித்தடங்களில் மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்பட்டன. ஆனால், பல்வேறு காரணங்களால் ஏ.சி பேருந்துகள் படிப்படியாக குறைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் முற்றிலும் நிறுத்தப்பட்டன.

  இந்த நிலையில், ஒன்னரை ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மாநகர போக்குவரத்துக் கழகம் மீண்டும் ஏ.சி பேருந்துகளை இயக்கி உள்ளது. கோயம்பேடு - வேளச்சேரி (தடம் எண்:570) மற்றும் திருவான்மியூர் - தாம்பரம் (தடம் எண்:91) ஆகிய தடங்களில் தற்போது ஏசி பேருந்து இயக்கப்படுகிறது.

  சமீபத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் தலா ₹36 லட்சம் மதிப்பு கொண்ட 48 பேருந்துகளை வாங்கியுள்ளது. விரைவில், மேலும் 5 வழித்தடங்களில் ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். செண்ட்ரல் - திருவான்மியூர், தி.நகர் - கேளம்பாக்கம், கோயம்பேடு - வண்டலூர், கிழக்கு தாம்பரம் - திருவான்மியூர், பிராட்வே - கேளம்பாக்கம் ஆகிய வழித்தடங்களில் ஏசி பேருந்து இயக்கப்பட உள்ளன.

  குறைந்தபட்ச கட்டணமாக ஏசி பேருந்தில் ரூ.15 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.60 கட்டணமாக உள்ளது. 2018-ல் இயக்கப்பட்ட வால்வோ ஏசி பேருந்தில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.28 இருந்தது குறிப்பிடத்தக்கது.

  Published by:Sankar
  First published:

  Tags: Chennai, MTC