பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து - பாஜகவினர் பலர் காயம் (அதிர்ச்சி வீடியோ)

விபத்து நடந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது

பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து - பாஜகவினர் பலர் காயம் (அதிர்ச்சி வீடியோ)
பலூன் வெடித்து விபத்து
  • News18 Tamil
  • Last Updated: September 19, 2020, 1:56 PM IST
  • Share this:
பாடியில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் கலந்துகொள்ளவிருந்த பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவில் தீ விபத்து ஏற்பட்டது. விழாவில் யாரும் எதிர் பாராத விதமாக கேஸ் நிரப்பிய 2000 பலூன்கள் வெடித்ததில் கட்சி தலைவர்கள் உட்பட பலபேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

காவல் துறை அனுமதி பெறாமல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த பாடி மண்டல அமைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அம்பத்தூர் அடுத்த பாடியில் காவல்துறை அனுமதியின்றி பாஜகவினர் முன்னெடுத்த கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கேஸ் பலூன் விபத்தில் தீ காயங்களுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என
மருத்துவமனைகளில் முதலுதவிக்காக


அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலூன்கள் தீப்பிடித்து விபத்து


பலூன்கள் தீப்பிடித்து விபத்து
பாடியில், பாஜக மாநில தலைவர் கலந்துகொள்ள இருந்த நிகழ்வில் விபத்து


பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை முதல் தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, முறையாக அனுமதி பெறாமல் பாஜகவினர் சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாடி திருவலிதாயம் சிவன் கோவில் அருகே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் விவசாய அணி சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க திட்டமிட்ட பாஜகவினர் கூடுதல் விமர்சைக்காக 2000 கேஸ் பலூன்களை பறக்கவிட திட்டமிட்டனர்

யாரும் எதிர்பாராத விதமாக சரவெடி பட்டாசு கொளுத்தப்பட்டது. அப்போது கேஸ் பலூன்கள் மீது தீப்பொறி பட்டதும் வெடித்துச் சிதறியதில் பாஜக விவசாய அணி துணைத் தலைவர் உள்பட பாஜகவைச் சேர்ந்த பலபேர் மீது சட்டென தீ பரவி காயமடைந்தனர்.

2000 பலூன்களின் ரப்பர் துகள்கள் தீ பிடித்து எரிந்தபடி சிதறியதில் தலை, கை முகம் என உடலில் பல பகுதிகளில் ரப்பர்
துகள்கள் ஒட்டிக்கொண்டன. சிலருக்கு அதிக தீ காயங்களும் ஏற்பட்டு முதலுதவிக்காக ஆட்டோ மற்றும் பைக்கில்
மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

 இதற்கிடையே இந்த விபத்து நடந்தபோது பதிவு செய்யப்பட்ட முழுவீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த கொண்டாட்டங்களுக்கு முறையான அனுமதியை பாஜக பெறவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

காவல் துறை உயர் அதிகாரிகளிடம் நடந்த விபத்து குறித்து விசாரித்தபோது, எந்த அனுமதியும் பெறவில்லை என்கின்றனர். அதேவேளைப் பிரதமர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட இந்த சம்பவம் பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போன்ற விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் போது முறையான
பாதுகாப்பு விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அப்போது தான் விபத்துக்களைத் தவிர்க்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் நடந்த சம்பவம் குறித்து கொரட்டுர் காவல் துறையினர் வழக்கு பதிவு செெய்துள்ளனர்.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக அரசு அனுமதியின்றி பொது நிகழ்ச்சிக்கு ஒன்றுகூடுதல், உயிருக்கு ஆபத்தான மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை நிகழ்ச்சிக்கு ஆஜாக்கரதியாக பயன்படுத்தியது என நிகழ்ச்சி ஏற்பாடு செய்த பாடி மண்டல அமைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்ய ஆலோசனை நடத்தி வருகின்றனர் கொரட்டுர் காவல் துறையினர். பிரதமரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட இந்த சம்பவம் பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
First published: September 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading