சென்னையில் காலாவதியான குடிநீர் கேன்கள் பறிமுதல்!

தரமற்ற தண்ணீர் கேன்கள் விற்பனை செய்வது குறித்து, 9444042322 என்ற எண்ணில் பொதுமக்கள் புகாரளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Vaijayanthi S | news18
Updated: May 15, 2019, 12:19 PM IST
சென்னையில் காலாவதியான குடிநீர் கேன்கள் பறிமுதல்!
தரமற்ற தண்ணீர் கேன்கள் விற்பனை செய்வது குறித்து, 9444042322 என்ற எண்ணில் பொதுமக்கள் புகாரளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Vaijayanthi S | news18
Updated: May 15, 2019, 12:19 PM IST
சென்னை கோயம்பேட்டில், 8 மினி வேன்களில் கொண்டுவரப்பட்ட காலாவதியான தண்ணீர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தண்ணீர் பற்றாக்குறை நீடித்துவரும் நிலையில், தரமற்ற குடிநீர் விற்கப்படுவதாக வந்த புகாரின்பேரில், சோதனை நடத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 500 கேன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோயம்பேடு ரோகிணி தியேட்டர் அருகே இன்று காலை தண்ணீர் கேன் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 8 மினி வேன்களில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் கேன்களை சோதனை செய்தனர்.

இந்தச் சோதனையில் 580 காலாவதியான, தரமற்ற மற்றும் லேபிள்கள் மாற்றி ஒட்டப்பட்ட தண்ணீர் கேன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனை செய்யும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்


இதனைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட தரமற்ற குடிதண்ணீர் கேன்கள்


இன்று காலை கோயம்பேடு, கொளத்தூர் மற்றும் வேளச்சேரி ஆகிய 3 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. மேலும் இந்த சோதனையானது இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading...
கடந்த 8-ம் தேதி நடைபெற்ற சோதனையில் 380 தண்ணீர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துக! குடிநீர் வடிகால் வாரியம் வேண்டுகோள்

Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...