கொரோனா ஊரடங்கு: வாடிப்போன பூ வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கை

கொரோனா ஊரடங்கு காரணமாக பூ வியாபாரம் அடியோ முடங்கிப்போயுள்ளதால் பூ வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கை வாடிப்போயுள்ளது.

கொரோனா ஊரடங்கு: வாடிப்போன பூ வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கை
பூக்கடை
  • Share this:
கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்தப்படாததாலும், கோயில்கள் திறக்கப்படாததாலும் பூ வியாபாரம் அடியோடு முடங்கியுள்ளது. இதன் காரணமாக பூ வியாபாரிகளின் வாழ்வு வாடிப்போய் வறிய நிலையில் இருப்பதாக அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் பல்வேறு சுபநிகழ்ச்சிகள், மேடை அலங்காரம், பூங்கொத்து என பூக்கள் விற்பனை பெருமளவில் நடைபெறும். இதை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது ஊரடங்கால் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாததால் பூக்கள் மற்றும் மாலை வாங்க யாரும் வருவதில்லை என்கிறார் பாண்டி பஜாரில் கடை வைத்திருக்கும் ராமன்.

முன்பெல்லாம் நாளொன்றுக்கு 50 முதல் 60 மாலைகள் வரை விற்பனை நடைபெற்ற கடைகளில் இப்போது 5 மாலைகள் விற்பதே அரிதாகிவிட்டன. கோயம்பேடு சந்தை இல்லாததால் இரவில் கண்விழித்து தொலைதூரம் சென்று பூக்களை வாங்கி வந்து மாலை கட்டினால், கட்டிய மாலைகள் கடைகளிலேயே தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. வேறு வழியின்றி இரவில் அவற்றை அப்படியே குப்பையில் போடும் நிலை உள்ளதாகச் சொல்கிறார் வியாபாரி சண்முகம்.


விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ள மாலைகள்.


Also see:


பிரம்மாண்டமாக நடைபெறும் திருமணங்களில் மேடை அலங்காரத்திற்காகவே லட்சங்களை செலவு செய்து, மாலைகளுக்கு 50 ஆயிரம் வரையிலும் செலவு செய்யும் குடும்பத்தினர் உண்டு. ஆனால், இப்போது திருமணம் என்றால் 2,000 ரூபாய் மாலை மற்றும் பூ வாங்குகின்றனர். சென்னையில் ஆங்காங்கே இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாலை வாங்க மட்டுமே ஒரு சிலர் வருகிறார்கள். அதிலும் கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்கள் வீட்டிற்குக் கூட கொண்டு செல்லாமல் நேராக இடுகாட்டுக்குக் கொண்டு செல்லப்படுவதால் வியாபாரமேயில்லை என்கிறார் சென்னை அடையாறு பகுதியில் கடை வைத்திருக்கும் ரமேஷ்.

வியாபாரம் குறைவாக நடைபெற்றாலும் கிடைக்கும் பணத்தில் மீண்டும் பூக்கள் வாங்கி மாலை கட்டி காத்திருக்கிறார்கள். இதற்கு இவர்கள் சொல்லும் ஒரே ஒரு காரணம், மனிதனுக்கு கடைசியில் கொண்டு செல்ல எதுவுமில்லை, இறந்தவருக்குக் கடைசியாக மரியாதை செலுத்த மாலை கிடைக்கவில்லை என்பதற்கு நாங்கள் காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதால்தான் என்கிறார்கள்.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading