• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்!

கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

  • Share this:
    தமிழகத்தில் இன்று முதல் கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. தகுதியுள்ள அனைத்து மாணாக்கர்களும் தடுப்பூசி  செலுத்துக்கொள்ள அறிவுறுத்துமாறும் கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று குறையத் தொடங்கியதையடுத்து  9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும்,  கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு முதல் பயிலும் மாணவர்களுக்கும் முதுகலை பயிலும் அனைத்து மாணவர்களுக்கு செப்டம்பர் ஒன்றாம் தேதி வகுப்புகள் தொடங்கியது.  ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

    இந்த நிலையில், கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சேர்க்கை முடிந்துள்ளதையடுத்து இன்றுமுதல் வகுப்புகள் தொடங்கியது. மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்!


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: