சென்னையில் தடையை மீறி பட்டாசு வெடிப்பு: 79 வழக்குகள் பதிவு

சென்னையில் தடையை மீறி பட்டாசு வெடிப்பு: 79 வழக்குகள் பதிவு

பட்டாசு வெடிப்பு

சென்னையில் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததற்காக, 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 • Share this:
  சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக தீபாவளியன்று காலை 6 முதல் 7 வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்த உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

  இருப்பினும், அரசின் உத்தரவை மீறி பல்வேறு இடங்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதுதொடர்பாக கடந்த 12 மணி நேரத்தில் சென்னை மாநகரில் மட்டும் 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சென்னையில் நேற்று மாலை நேரத்தில் பட்டாசு வெடித்தபோது சுமார் 25 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். காலையிலிருந்து 57 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், பெரம்பூரில் ராக்கெட் பட்டாசு வெடித்தபோது, தீவிபத்து ஏற்பட்டு மூன்று குடிசை வீடுகள் எரிந்து நாசமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க...பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் தேர்வுசெய்யப்பட வாய்ப்பு.... தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏ-க்கள் இன்று ஆலோசனை  இதே போல் டெல்லியிலும் தடையை மீறி நேற்று பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் அங்கு காற்றின் தரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: