சென்னையில் மின்கசிவு காரணமாக மருந்துகடை & ஏடிஎம் மையத்தில் தீ விபத்து - ₹ 1 லட்சம் பணம் நாசம்

” ஏ.டி.எம் மெஷின் முழுவதுமாக எரிந்தாலும், உள்ளே இருந்த பணம் எதுவும் எரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது”

சென்னையில் மின்கசிவு காரணமாக மருந்துகடை & ஏடிஎம் மையத்தில் தீ விபத்து - ₹ 1 லட்சம் பணம் நாசம்
மின்கசிவு
  • Share this:
சூளைமேட்டில் மின்கசிவு காரணமாக மருந்து கடை மற்றும் ஏடிஎம் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ரூ. 1 லட்சம் பணம் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் எரிந்து சேதமடைந்தன.

சென்னை சூளைமேட்டில் ஸ்ரீசாய் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருபவர் மோகன். இவர் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். இரவு 1 மணியளவில் மருந்து கடையில் திடீரென்று மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.

பின்னர் உடனே மருந்து கடை முழுவதும் தீயானது பரவி எரிய தொடங்கியது. இந்த தீயை கண்ட பொதுமக்கள் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.


சம்பவ இடத்திற்கு  எழும்பூர், கீழ்ப்பாக்கம், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்தன.

ஆனால், அதற்குள் தீயானது பரவி அருகிலிருந்த பாங்க் ஆப் பரோடா என்ற ஏடிஎம் மையத்திலும் எரிய தொடங்கியது.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.இந்த விபத்தில் மெடிக்கல் கடையில் இருந்த ரூ. 1 லட்சம் பணம் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் எரிந்து சேதமடைந்தன.

இதில் ஏ.டி.எம் மெஷின் முழுவதுமாக எரிந்த பிறகும் உள்ளே இருந்த பணம் எதுவும் எரியவில்லை. இந்த விபத்து தொடர்பாக சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also see... 
First published: March 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading