• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து.. போலீசார் விசாரணை..

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து.. போலீசார் விசாரணை..

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share this:
    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தால், பரபரப்பு ஏற்பட்டது.

    கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் பழுதான பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் கொளுந்துவிட்டு எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    Also see: ’அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தாமாக முன்வந்து பதவி விலகவேண்டும்’.. கல்வியாளர்கள் வலியுறுத்தல்..

    விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பேருந்து முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே இடத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில், 4 பேருந்துகள் எரிந்து சேதம் அடைந்தன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: