தீ விபத்து ஏற்பட்ட ஐ.சி.எஃப் தொழிற்சாலை குடோனில், பாதுகாப்பு பணியில் இருந்த ஆர்.பி.எஃப் வீரர் தற்கொலை..

ஐ.சி.எஃப் குடோனில் தீ பற்றி பல கோடி ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிக்கல் பொருட்கள் எரிந்த நிலையில், இன்று அந்த குடோனின் பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட ஐ.சி.எஃப் தொழிற்சாலை குடோனில், பாதுகாப்பு பணியில் இருந்த ஆர்.பி.எஃப் வீரர் தற்கொலை..
ஐ.சி.எஃப் தீ விபத்து
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 3:09 PM IST
  • Share this:
சென்னை வில்லிவாக்கம் அடுத்த நியூ ஆவடி சாலையில் ஐ.சி.எஃப் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ரயில் என்ஜின்கள் மற்றும் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் பெட்டிகள் தயாரிக்க தனித்தனியாக பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது எலக்ட்ரிக்கல், பெயிண்டிங் முதலான அனைத்துப் பணிகளுக்கும் ரயில் பெட்டிகள் குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தயாரிக்கப்படும்.

ரயில் பெட்டிகளுக்குத் தேவையான எலக்ட்ரிக்கல் உதிரி பாகமானது எண் 54 என்ற சேமிப்புக் கிடங்கு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 5,000 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இந்த குடோனில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிகல் பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை 3 மணி அளவில் இந்த குடோனில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததைக் கண்டு ஊழியர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். விபத்தின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் வில்லிவாக்கம், அண்ணா நகர், செம்பியம் , எழும்பூர் உட்பட்ட தீயணைப்பு நிலையங்களிலிருந்து 16 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வரவழைக்கப்பட்டன. தகவலறிந்த தீயணைப்புத்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, தீயணைப்புத்துறை இணை இயக்குநர் ப்ரியா ரவிசந்திரன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து, அவர்கள் மேற்பார்வையில் சுமார் 6 மணி நேரம் வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.


Also read: பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 74 உற்சவர் சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் எவ்வளவு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின என்பது குறித்து ஐ.சி.எஃப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், ஐசிஎப் நிர்வாக அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், தீப்பற்றிய குடோனில் பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாப்புப் படை வீரர் காஜா மைதீன் (57) என்பவர் இன்று காலை ஐம்சி.எஃப்க்கு வெளியே உள்ள மரத்தில் தனது சட்டையினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தீ விபத்து நடந்ததற்கு விசாரணை என்கிற பெயரில் ஏதேனும் உயரதிகாரிகள் இவருக்கு மன அழுத்தம் கொடுத்தார்களா, தீ விபத்து நடந்ததில் இவருக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா, பயத்தினால் தற்கொலை செய்து கொண்டாரா போன்ற பல்வேறு கோணங்களில் ஐ.சி.எஃப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.சி.எஃப் குடோனில் தீ பற்றி பல கோடி ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிக்கல் பொருட்கள் எரிந்த நிலையில், இன்று அந்த குடோனின் பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading