சென்னை எழிலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி அலுவலகத்தில் தீ விபத்து

சென்னை எழிலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை எழிலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி அலுவலகத்தில் தீ விபத்து
எழிலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி அலுவலகத்தில் தீ விபத்து
  • Share this:
சென்னை எழிலகத்தில் உள்ள நான்காவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் ஊழியர்கள் பதற்றமடைந்து வெளியேறினர். தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்ததும் மூன்று வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

சென்னை எழிலகத்தில் உள்ள நான்கு மாடி கட்டடத்தில் நான்காவது மாடியில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்த ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அதை தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி அணைத்தனர். பெரிதாக ஆவணங்கள், பொருடக்ள் சேதமடையவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Also read: பெரம்பலூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை


தீ விபத்து நேரத்தில் கமிஷனர் சஜ்ஜன்சிங் சவான் சம்பவ இடத்தில் இல்லாததால் உயிர் தப்பினார். கட்டடத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் பயந்து வெளியேறியதால் எழிலக வளாகமே பரபரப்பாகக் காணப்பட்டது. ஏற்கனவே எழிலகத்தில் 2010, 2012, 2014, 2017ஆகிய ஆண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிலும் 2012ம் ஆண்டு தீயை அணைக்க முற்பட்டபோது தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தார். பிரியா ரவிச்சந்திரன் என்ற அதிகாரிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading