பொருளாதார சவால்களை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - நிர்மலா சீதாராமன்

பொருளாதார சவால்களை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
  • News18
  • Last Updated: September 11, 2019, 7:12 AM IST
  • Share this:
சென்னையில் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள், கரும்பு விவசாயிகள் உள்ளிட்டோருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

சென்னைக்கு வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று, 100 நாட்களில் செய்த சாதனைகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, பொருளாதார சவால்களை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் தெரிவித்தார்.

வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள சரிவுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து, கட்டுமானத் துறையின் அடிப்படை கட்டமைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், சர்க்கரை ஆலை உரிமையாளர்கள், கரும்பு விவசாயிகள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினார்.


கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை, கரும்பு ஆலைகள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டது. இதையடுத்து, கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை விவகாரத்தில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.

இதுகுறித்து ஆலோசனை நடத்த நிதித் துறை மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை அனுப்பிவைக்க உள்ளதாகவும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் என்றும் மத்திய அமைச்சர் உறுதியளித்ததாக கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் வேட்டவளம் மணிகண்டன் தெரிவித்தார்.

First published: September 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்