• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • போலி சாமியார் பண மோசடி விவகாரத்தில் பரிதாபமாக தற்கொலை செய்து கெண்ட பெண்

போலி சாமியார் பண மோசடி விவகாரத்தில் பரிதாபமாக தற்கொலை செய்து கெண்ட பெண்

Youtube Video

சென்னையில் போலி சாமியாரால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

  • Share this:
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் குடியிருப்பு ஒன்றில் ராஜேஸ்வரி என்பவர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது கணவர் சீனிவாசன் தனியார் நட்சத்திர ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு குழ்ந்தையோடு நடைபயிற்சி மேற்கொள்ள செல்லும் போது ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக மாம்பலம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


ராஜேஸ்வரியின் உடலானது ப்ரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜேஸ்வரியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக விசாரணை செய்ததில் ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள காரணம்,கே.கே நகர் பகுதியை சேர்ந்த போலி சாமியார் சவுந்திராஜன் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நகர் பகுதியில் வசித்து வரும் போது, ஜாதகம் பார்ப்பதாக கூறி சாமியார் சவுந்தராஜனை அணுகியுள்ளனர். அகஸ்திய சன்மார்க்க சத்சங்கம் என்ற பெயரில், பூஜைகள் நடத்தி குறைகளை தீர்ப்பதாக பணம் வசூலித்துள்ளார். அகத்தியர் மீது பக்தி கொண்ட சீனிவாசன் சாமியார் சவுந்திராஜன் மாயவார்த்தையை நம்பி பணத்தை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் வீடு வாங்க திட்டமிள்ளதாக சீனிவாசன் தெரிவித்துள்ளார். வீடு குறைந்த விலைக்கு தான் வாங்கி தருவதாக கூறி, சீனிவாசனிடம் 25 லட்சம் வரை வாங்கியுள்ளார். இதனிடையே எம் ஜி ஆர் நகரில் இருந்து தியாகராய நகர் மேட்லி சாலையில் உள்ள குடியிருப்புக்கு சீனிவாசன் குடும்பத்துடன் மாறியுள்ளார்.

நீண்ட நாட்களாகியும்  வீடு வாங்கி தராததால், சாமியாரிடம் பணத்தை கேட்டுள்ளனர். தொடர்ந்து பணத்தை கொடுக்காமல் சாமியார் அலைக்கழித்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நடவடிக்கை மேற்கொண்டதால், சாமியார் 5 காசோலைகள்  முன்தேதியிட்டு  கொடுத்துள்ளார்.

ஆனால் சாமியார் வங்கி கணக்கில் பணம் இல்லாததால், காசோலைகள் திரும்ப வந்துள்ளது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த சீனிவாசன் மற்றும் ராஜேஷ்வரி கடந்த மாதம் 28 ஆம் தேதி பணத்தை கேட்க சென்றுள்ளனர். அப்போது தனது மனைவி ரேவதி அசோக் நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பதாகவும், பணம் கேட்டு தொல்லை செய்தால் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துவிடுவேன் என மிரட்டியதாக சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பணத்தை இழந்த மன உளைச்சலில் கணவன்- மனைவியிடையே சண்டைகள் ஏற்பட்டதாகவும், தனது மனைவி  மனம் உடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தனது மனைவி இறப்புக்கு காரணாமான போலி சாமியார் சவுந்தராஜன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும் படிக்க..ஆபாசமாக வடிவமைக்கப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை..போலி சாமியார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்போம் என பெட்ரோல் பாட்டிலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களை போன்று பல பேர் ஏமாந்துள்ளதாகவும் , அவர்களிடமெல்லாம் தனது மனைவி காவல்துறையில் உதவி ஆய்வளாக இருப்பதை வைத்து மிரடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: