கொரோனா தடுப்புப் பணிகள்: தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு மீண்டும் பணிநீட்டிப்பு?

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு மேலும் மூன்று மாதங்கள் பணிநீட்டிப்பு வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா தடுப்புப் பணிகள்: தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு மீண்டும் பணிநீட்டிப்பு?
தலைமைச் செயலாளர் சண்முகம்
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 12:41 PM IST
  • Share this:
1985-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்.அதிகாரியான சண்முகம், கடந்தாண்டு தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார். இதனைதொடர்ந்து ஜுலை 31-ஆம் தேதியுடன் அவர் ஓய்வுபெறுவதாக இருந்த நிலையில், கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததால் அவருக்கு மூன்று மாதம் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது.

படிக்க...மாநிலத்தின் 37% பாதிப்பு ஒரே நகரத்தில்.. பெங்களூருவை மிரட்டும் கொரோனா...

அதன்படி அக்டோபர் மாதத்துடன் உடன் அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு மேலும் 3 மாதங்கள் பணிநீட்டிப்பு வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.


மேலும் படிக்க...முன்பதிவு செய்தோருக்கு மட்டும் புரட்டாசி சனிக்கிழமை தரிசனத்துக்கு அனுமதி.. ரங்கநாதர் கோயில் நிர்வாகம் அறிவிப்பு..



இதனை மத்திய அரசு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading