• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை விமான நிலையத்தில் புதிய வசதி.. கூடுதல் விமானங்களை இயக்க விரைவு இணைப்பு பாதை

சென்னை விமான நிலையத்தில் புதிய வசதி.. கூடுதல் விமானங்களை இயக்க விரைவு இணைப்பு பாதை

சென்னை விமான நிலையத்தில், விரைவு இணைப்புப் பாதை செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

  • Share this:
    சென்னை விமான நிலையத்தில் கூடுதல் விமானங்களை இயக்க வசதியாக அமைக்கப்பட்ட விரைவு பாதை செயல்பட தொடங்கியது.

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஒடுபாதையில் ஒரே நேரத்தில் ஒரு விமானம் பறக்கவும் தரையிறங்கவும் முடியும். மேலும் ஒரு விமானம் தரையிறங்க காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் விமானங்கள் காலதாமதமின்றி விரைவாக நடைமேடைக்கு செல்ல ஒடுபாதையில் இருந்து விரைவு வெளியேறும் இணைப்பு பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.



    இதற்காக ஒடுபாதையில் இருந்து நடைமேடைக்கு செல்ல புதிய இணைப்பு விரைவு பாதை 44 மீட்டர் அகலத்திலும் 365 மீட்டர் நீளத்திலும் அமைக்கப்பட்டது. இந்த விரைவு பாதையில் விமானங்கள் 30 டிகிரியில் திரும்ப கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது.

    விரைவு இணைப்பு பாதையில் விமான சேவையின் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு விரைவு இணைப்பு பாதையில் விமான சேவை செயல்படுத்த ஒப்புதல் அளித்தது.

    விரைவு பாதை முலம் விமானங்கள் காலதாமதமின்றி நடைமேடைக்கு செல்வதால் அதிகமான விமானங்கள் தரையிறங்க முடியும். தற்போது ஒரு மணி நேரத்திற்கு 36 விமான சேவைகள் செயல்படுத்தப்பட்ட நிலையில் விரைவு இணைப்பு பாதை முலம் ஒரு மணி நேரத்திற்கு 42 விமான சேவைகள் செயல்படுத்த முடியும்.

    ஆய்வுகள் முடிக்கப்பட்ட பின் விரைவு இணைப்பு பாதை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. விரைவு இணைப்பு பாதையை சென்னை விமான நிலைய இயக்குனர் சுனில் தத் தொடங்கி வைத்தார். இதில் விமான நிலைய பொது மேலாளர் தீபக், விமான சேவை பொது மேலாளர் ஸ்ரீவட்சவா, சென்னை வான் கட்டுபாட்டு அறை மேலாளர் ராஜசேகர், திட்ட மேலாளர் சரத்குமார், திட்ட உதவி செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    விரைவு இணைப்பு பாதை செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததும் கத்தாரில் இருந்து வந்த விமானம் முதலில் தரையிறங்கியது. கத்தார் விமானத்திற்கு இருபக்கமும் தீயணைப்பு வாகனங்கள் முலம் நீர் பாய்ச்சி உறசாகமாக வரவேற்கப்பட்டது

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: