சென்னையில் இருந்து சவூதி சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! சேலம் ஆசாமிக்கு வலைவீச்சு

தொலைபேசியில் பேசிய அந்த மர்ம நபர் சேலம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவன் என தெரியவந்தது.

Web Desk | news18-tamil
Updated: August 9, 2019, 12:04 PM IST
சென்னையில் இருந்து சவூதி சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! சேலம் ஆசாமிக்கு வலைவீச்சு
சென்னை விமான நிலையம்
Web Desk | news18-tamil
Updated: August 9, 2019, 12:04 PM IST
 சென்னையில் இருந்து இன்று காலைசவூதி அரேபியா செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியின் மூலமாக மர்மநபர் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்று அங்கிருந்து சவூதி அரேபியா செல்லும் விமானத்தில் சபினா என்ற பெண் செல்கிறார். அவர் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று டெல்லி விமான நிலைய அதிகாரிகளுக்கு மர்ம ஆசாமி தொலைபேசியின் மூலமாக கூறினார்.

இதையடுத்து விமான் அநிலைய அதிகாரிகள்  சென்னை போலீசாருக்கு தகவல் தந்தனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு உள்ள நிலையில் வெடிகுண்டு குறித்து மர்ம தொலைபேசி வந்ததால் தீவிரமாக வெடிகுண்டு குறித்து சோதனை நடத்தினர்.


அதில் எந்தவொரு விமானத்திலும் சபினா என்ற பெயரில் யாரும் செல்லவில்லை என்பது தெரியவந்தது. மேலும் சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் ஏறும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த மர்ம ஆசாமி குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சேலம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவன் என தெரியவந்தது. அந்த ஆசாமியை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தின் கதை

Loading...


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...