• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் நாளை முதல் மின்சார ரயில்சேவை அதிகரிப்பு

சென்னையில் நாளை முதல் மின்சார ரயில்சேவை அதிகரிப்பு

மின்சார ரயில்

மின்சார ரயில்

வாரநாட்களில் 660 ரயில்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல் 410 ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    சென்னையில் நாளை முதல் மின்சார ரயில் சேவை 660-ஆக அதிகரிக்கப்படுகிறது. ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு, படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது தினமும் 500 ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் 410 ரயில்கள் இயக்கப்படும்.

    இந்நிலையில் நாளை முதல் கூடுதலாக 160 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் வாரநாட்களில் 660 ரயில்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல் 410 ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கும் காலையில் முதல் சேவை 3.55 மணிக்கு தொடங்க உள்ளது. கடைசி ரயில் சேவை இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும்.

    மூர்மார்க்கெட், வேளச்சேரி, அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கான கடைசி ரயில்சேவை இரவு 10 மணி முதல் 12 மணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: