இனி சமூக வலைதளங்களில் பகிரப்படும் விளம்பரங்களும் ஆய்வு செய்யப்படும்!

தேவைக்கேற்ப துணை ராணுவப்படைகள் வரவழைக்கப்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் கூறினார்.

இனி சமூக வலைதளங்களில் பகிரப்படும் விளம்பரங்களும் ஆய்வு செய்யப்படும்!
சமூக வலைத்தளம்
  • News18
  • Last Updated: March 20, 2019, 1:58 PM IST
  • Share this:
அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்களோடு சேர்த்து, சமூக வலைதளங்களில் ஒளிபரப்பபடும் விளம்பரங்களையும் ஆய்வு செய்து வருவதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடிய முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. பிரசாரங்களும் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் ஊடகங்களில் வேட்பாளர்கள் அல்லது கட்சிகள் சார்பில் ஒளிபரப்பக்கூடிய விளம்பரங்களை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறை, தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள கட்டுபாட்டு அறையை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் ஆய்வு செய்தார்.


பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஊடகங்களில் வேட்பாளர்கள் அல்லது கட்சிகள் விளம்பரம் செய்வதற்கு முதன் முறையாக ஊடகச் சான்று ஊடக கண்காணிப்புக் குழுவிடம் முறையாக அனுமதி பெற்று, தேர்தல் ஆணையம் வழங்கும் குறியீட்டு எண்ணுடன்தான் விளம்பரங்களை ஒளிபரப்பவோ அல்லது அச்சிடவோ வேண்டும்.

அவ்வாறு குறியீடு எண் இல்லாமல் வரக்கூடிய விளம்பரங்களை ஆய்வு செய்து அதன் செலவினை வேட்பாளர் கணக்கோடு சேர்க்கப்படும் என தெரிவித்தார். அதே போல் சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்களையும் ஆய்வு செய்து வருவதாகவும் அந்த செலவினையும் வேட்பாளர் செலவில் சேர்க்கப்படும் என கூறினார்.

அதே போல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களைச் சேர்த்து மொத்தம் 96 குழுக்கள் செயல்படுவதாகவும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ் கருவிகள் துணைகொண்டு, அவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தேவைக்கேற்ப துணை ராணுவப்படைகள் வரவழைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.Also see... குடிபோதையில் தகராறு... பட்டதாரி இளைஞர் படுகொலை 
First published: March 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading