டிஜிட்டல்மயமாகிறது எழும்பூர் அருங்காட்சியகம்..

வாழ்வியல் வழிகாட்டியான சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன. 

  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 9:40 AM IST
  • Share this:
எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருக்கும் அனைத்தும் வெறும் பொருட்கள் அல்ல, நம் முன்னோர்களின் வாழ்வியல். மிகப்பழமையான சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏராளமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கிருக்கும் பொருட்கள் பற்றிய விவரங்கள் அருங்காட்சியத்தில் உள்ள புத்தகங்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளன. வரும் காலத்தில் இந்த பதிவேடுகளை பாதுகாப்பது சிரமம் என்றும், ஒரு பொருளை பற்றிய விவரங்களை தேடி எடுப்பதிலும் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காலமாற்றம் காரணமாக, தற்போது பொருட்களின் வரலாற்றை புகைப்படத்துடன் இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொருளின் புகைப்படம் மற்றும் அது தொடர்பான விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதன்மூலம், தேடி எடுப்பது எளிதென கூறும் அருங்காட்சியக அதிகாரிகள், ஆராய்ச்சி மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தே அருங்காட்சியத்தில் உள்ள பொருட்களைப் பற்றி எளிதாக தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.அருங்காட்சியக இணையதளத்தில், ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் குறித்த தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. இந்த டிஜிட்டல் திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகத்தில் விரிவுப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க.. முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம்: அதிமுக செயற்குழுவில் காரசார விவாதம்.. அக்.7-ஆம் தேதி அறிவிப்பு.. கே.பி.முனுசாமி தகவல்இந்த தொழில்நுட்ப முறையால், சிலைகடத்தல், வரலாற்று சிறப்புமிக்க பொருட்கள் தொலைந்து போவது தடுக்கப்படும் என்றும், அவ்வாறு தொலைந்து போனாலும் எளிதில் கண்டுபிடித்து விடலாம் என்றும் அருங்காட்சிய ஆணையர் சண்முகம் கூறுகிறார்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading