சென்னை-மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் வரும் ஜனவரி 4ந் தேதி முதல் ரத்து

தேஜஸ் சிறப்பு ரயில்

சென்னை-மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் வரும் ஜனவரி 4ந்தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

 • Share this:
  சென்னை எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரயில் தினமும் காலை 6 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மதியம் 12.20 மணிக்கு மதுரை சென்றடையும் வகையில் விரைவாக இயக்கப்பட்டு வந்தது.

  இதேபோன்று மறுமார்க்கமாக மதுரை-எழும்பூர் இடையே தேஜஸ் சிறப்பு ரயில் மதியம் 3 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

  இந்நிலையில், சென்னை மற்றும் மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜஸ் சிறப்பு ரயில் வரும் ஜனவரி 4ந்தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளிவந்துள்ளது. ரயில் பயணிகளிடம் ஆதரவு குறைந்து காணப்படும் சூழலில், ரயில் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  பெண்களின் ஆடையால் மனம் கெட்டுப் போகுமா?"- கமல்ஹாசன் (வீடியோ)


  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: