சென்னை விமானநிலையத்தில் மூடப்பட்ட இ-பாஸ் கவுண்டர்கள் மீண்டும் திறப்பு

சென்னை விமான நிலையம் (கோப்பு படம்)

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 பணியில் இருந்து மாநில அரசு அமைத்திருந்த இ-பாஸ் கவுண்டா்கள் எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி திடீரென மூடப்பட்டன.

 • Share this:
  சென்னை விமான நிலையத்தில் மூடப்பட்ட இ-பாஸ் கவுண்டா்கள் . பயணிகளின் கடுமையான எதிா்ப்புகள் காரணமாக 2 நாட்களுக்கு பின்பு மாநில அரசின் நடவடிக்ககையால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

  கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மாவட்டங்கள்,
  மாநிலங்கள் இடையே பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் முறை அமுலில் இருந்தது.மத்திய அரசு ஆகஸ்ட் மாதம் மத்தியில் அறிவித்த தளா்வுகளில் நாடு முழுவதும் இ-பாஸ்கள் இல்லாமல் பயணிகள் பயணிக்கலாம் என்று அறிவித்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் இ-பாஸ் முறை ரத்தானது..

  தமிழ்நாட்டில் மட்டும் இ-பாஸ் முறை தொடா்ந்து அமுலில் இருந்துவந்தது. இம்மாதம் முதல் தேதியிலிருந்து தமிழ்நாட்டிற்குள் இ-பாஸ்கள் இல்லாமல் பயணிக்கலாம்.ஆனால் மாநிலங்கள் இடையே பயணிக்க இ-பாஸ்கள் கட்டாயமாக அமுலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.

  சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முணையத்தில் வருகை பகுதியில் தமிழக அரசின் வருவாய் துறையினா் அமைத்திருந்த இ.பாஸ் கவுண்டா்கள் தொடா்ந்து செயல்பட்டது. .வெளி மாநிலங்களிலிருந்து வரும் விமான பயணிகள் அந்த கவுண்டா்களில் இ-பாஸ்களை பெற்று, விமான நிலையத்தில் இருந்து வெளியே சென்றனா்.

  இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 பணியில் இருந்து மாநில அரசு அமைத்திருந்த இ-பாஸ் கவுண்டா்கள் எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி திடீரென மூடப்பட்டன. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை இரவிலிருந்து வெளி மாநில விமானங்களில் வரும் பயணிகள் இ.பாஸ்கள் வாங்கி வெளியே செல்ல முடியாமல் தவித்தனா்.

  சென்னை விமான நிலைய அதிகாரிகள் அந்த பயணிகளிடம் தங்களுடைய செல்போன்களில் ஆன்லைனில் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று வெளியே செல்லும்படி கூறினா். ஆனால் பயணிகள் பலா் விண்ணப்பித்தாலும் இ பாஸ்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. அவா்களுக்கு விமான நிறுவனம் மற்றும் விமானநிலைய ஊழியா்கள் ஆன்லைனில் இ.பாஸ்கள் எடுக்க உதவினா்.  இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமானங்களில் வந்த பயணிகள் இ.பாஸ்கள் இல்லாமல் வெளியில் செல்ல முடியாமல் அதிப்பட்டனா்.அதோடு பயணிகளுக்கும் பாதுகாப்பு அதிகாரிகள், விமானநிலைய அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதங்களும் ஏற்பட்டன.

  இதுபற்றி பத்திரிகைகளிலும் செய்திகள் வந்தன. அதோடு பயணிகள் பலா் மாநில அரசுக்கும், சென்னை விமான நிலைய உயா் அதிகாரிகளுக்கும் இ-மெயில் மூலம் புகாா்கள் தெரிவித்தனா். இதையடுத்து மாநில அரசு மீண்டும் சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முணையத்தில் இ-பாஸ்கவுண்டா்களை அமைக்க முடிவு செய்தது. அதற்காக சென்னை விமான நிலைய உயா் அதிகாரிகளிட் அனுமதி கேட்டனா்.

  சென்னை விமான நிலையத்திற்குள் மீண்டும் விமான நிலைய அதிகாரிகள் இடம் ஏற்படுத்தி கொடுத்ததையடுத்து, மீண்டும் இன்று பிற்பகலில் இ-பாஸ் கவுண்டா்கள் திறக்கப்பட்டுள்ளன.  செங்கல்பட்டு மாவட்ட வருவாய்துறையினா் வெளி மாநிலங்களிலிருந்து விமானங்களில் வரும் வரும் பயணிகளுக்கு
  இ-பாஸ்கள் கொடுக்கும் பணியை தொடங்கியுள்ளனா். இதனால் கடந்த 2 தினங்களாக விமான பயணிகள் பட்ட அவதி நீங்கியுள்ளது.
  Published by:Vijay R
  First published: