திருமழிசை சந்தையில் டன் கணக்கில் தேங்கும் காய்கறிகள்: கடும் விலை வீழ்ச்சியால் வியாபாரிகள் கவலை...

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த ஜூன் 19 முதல் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

திருமழிசை சந்தையில் டன் கணக்கில் தேங்கும் காய்கறிகள்: கடும் விலை வீழ்ச்சியால் வியாபாரிகள் கவலை...
திருமழிசை
  • Share this:
கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த ஜூன் 19 முதல் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நாட்களில் காய்கறிகள் விற்பனைக்கு காலை 6 மணி முதல் 2 மணி வரை அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக திருமழிசை காய்கறி சந்தைக்கு சில்லறை வியாபாரிகள் வருவது குறைந்து, சராசரியாக நாளொன்றுக்கு 5000 டன் காய்கறிகள் விற்பனையான நிலையில்,  தற்போது 3000 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனையாகி உள்ளதாகவும், மீதமுள்ள 2000 டன் காய்கறிகள் தேங்கி வீணாவதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜூன் 21 (நாளை) மற்றும் ஜூன் 28 ஆகிய இரு நாட்களில் எந்தவித தளர்வுகள் இன்றி ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால் காய்கறிகள் மொத்தமாக தேங்கி வீணாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.


திருமழிசை சந்தை


இதனால் காய்கறிகள் விலை அனைத்தும் மிகக் குறைவான விலையில் விற்கப்படுவதாக கூறியுள்ளனர்.80 ரூபாய் விற்ற பீன்ஸ் 30 ரூபாய்க்கும்,45 ரூபாய் விற்ற கேரட் 15 ரூபாய்க்கும்,25 ரூபாய் விற்ற முள்ளங்கி 5 ரூபாய்க்கும்,20 ரூபாய் விற்ற சௌ சௌ 10 ரூபாய்க்கும், 15 ரூபாய் விற்ற வெங்காயம் 12 ரூபாய்க்கும், 20 ரூபாய் விற்ற கொத்தமல்லி கட்டு 5 ரூபாய்க்கும்,45 ரூபாய் விற்ற மிளகாய் 10 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட அனைத்து பச்சை காய்கறிகளும் விலை 10 ரூபாய் வரை விலை குறைந்து விற்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளிலும் காய்கறிகள் விற்பனைக்கு மட்டுமாவது அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
First published: June 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading