"நானும் ரவுடிதான்... நானும் ரவுடிதான்.." பெரம்பூரில் குடிபோதையில் கடைகளில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட ரவுடி கைது

ரகளையில் ஈடுபட்ட நபர்

ஏரியாவில் தான் ரவுடி என்பதை நிரூபித்து மாமூல் வேட்டையில் ஈடுபடுவதற்காக கடைகளுக்குள் சென்று கத்தியால் மிரட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

  • Share this:
சென்னை வியாசர்பாடி பெரியார் நகர் பகுதியில் எஸ்.பி.ஏஜென்ஸி என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மாதவரத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை இவர் பணியில் இருந்தபோது அந்த பக்கமாக குடிபோதையில் கத்தியுடன் வந்த நபர் ஒருவர் கருப்பசாமியை கத்தியால் முதுகில் தாக்கிவிட்டு அருகில் இருந்த சிக்கன் கடை உட்பட மூன்று கடைக்குள் சென்று அங்கிருந்த கண்ணாடிகள் மற்றும் பொருட்களை கத்தியால் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த ரவுடி மகேஷ் என்பவர் கடையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக புகாரினை பெற்று வழக்குப்பதிவு செய்த போலீசார் வியாசர்பாடி பகுதியில் பதுங்கி இருந்த பெரியார் நகரைச் சேர்ந்த மகேஷ்(29) என்பவரை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.

Also Read: மதுரையில் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வந்த இளம்பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கொடூரம்; 5 பேர் கொண்ட கும்பல் கைது!

விசாரணையில் மகேஷ் மீது செம்பியம், திருவிக நகர், சோழவரம் ஆகிய காவல் நிலையங்களில் அடிதடி, பணம் பறிப்பு, கொலை மிரட்டல், கொலை முயற்சி என பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. மேலும் இவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார் என்பதும், சிறையிலிருந்து வெளியே வந்த இவருக்கு மது மற்றும் கஞ்சா குடிக்க பணக்கஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இவர் பலரிடம் பணம் கேட்டும் யாரும் தரவில்லை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் ஏரியாவில் தான் ரவுடி என்பதை நிரூபித்து மாமூல் வேட்டையில் ஈடுபடுவதற்காக கடைகளுக்குள் சென்று கத்தியால் ரகளை செய்து சினிமா காமெடி நடிகர் வடிவேலு பாணியில் நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான் எனகூறி, அடுத்த முறை தான் வரும்போது மாமூல் கொடுக்க வேண்டும் என கடைக்காரர்களை மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.மக்களுக்கு தன் மீது பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே நேற்று இதுபோல சம்பவத்தில் அவர் ஈடுப்பட்டதாக போலீசாரிடம் கைது செய்யப்பட்டுள்ள மகேஷ் தெரிவித்துள்ளர்.

Also Read: வயிற்றில் குத்திய கத்தி உடன் காவல்நிலையம் வந்த இளைஞர் - இணையத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ

இதனையடுத்து போலீசார் இவரை சிறையில் அடைத்தனர்.மேலும், மகேஷ் கத்தியால் தாக்கிய கருப்பசாமிக்கு முதுகில் வெட்டுகாயம் ஏற்பட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: