ஏழு வயது சிறுவன் வாயில் 526 பற்கள்! மருத்துவர்கள் அதிர்ச்சி

சிறு வயதில், அந்தச் சிறுவனுக்கு பல்வீக்கம் இருந்தபோது, அவனது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

news18
Updated: July 31, 2019, 8:42 PM IST
ஏழு வயது சிறுவன் வாயில் 526 பற்கள்! மருத்துவர்கள் அதிர்ச்சி
பற்கள்
news18
Updated: July 31, 2019, 8:42 PM IST
சென்னை மருத்துவர்கள் ஏழு வயது சிறுவன் வாயிலிருந்து முறையற்று வளர்ந்திருந்த 526 பற்களை புடுங்கி எடுத்துள்ளனர். ஒருவரது வாயில் இத்தனை பற்கள் இருந்தது உலகில் இதுவே முதன்முறை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் 3 வயதிலிருந்தே, கீழ் பல்தாடை வீக்கத்தால் அவதிப்பட்டுவந்துள்ளான். அவனுக்கு காம்பவுண்ட் காம்போசைட் ஆன்டான்டோம்(compound composite ondontome)என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்துள்ளான். சிறு வயதில், அந்தச் சிறுவனுக்கு பல்வீக்கம் இருந்தபோது, அவனது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

புடுங்கி எடுக்கப்பட்ட பற்கள்மேற்கட்டச் சிகிச்சைக்கு அவனை அழைத்துச் சென்றபோது, அவன் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. அதனால், மேற்சிகிச்சையை பெற்றோர்கள் தொடரவில்லை. இந்தநிலையில், தற்போது ஏழு வயதானநிலையில், அவனுக்கு கீழ் தாடையில் வலி மேலும் அதிகமாகியுள்ளது. அவனை, சென்னையிலுள்ள சவிதா பல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே, எக்ஸ்-ரே மற்றும் சி.டி.ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருடைய கீழ் தாடையில் ஏராளமான பற்கள் வளர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

எனவே, மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். அறுவைச் சிகிச்சை செய்தபோது, 200 கிராம் எடையில் 526 பற்கள் புடுங்கி எடுக்கப்பட்டது. பற்கள், மிகச் சிறிய அளவிலும், பெரிய அளவிலும் இருந்தன. தற்போது, சிறுவன் நலமாக உள்ளான். இதுகுறித்து தெரிவித்த மருத்துவர்கள், ஒருவரின் வாயில் இத்தனை பற்கள் இருந்தது இதுதான் உலக அளவில் முதன்முறை என்று தெரிவித்துள்ளனர்.

Also see:

Loading...

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...